செய்தியாளர்: தங்கராஜூ
பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் புகையிலை போதை வஸ்துகள் கடத்துவதாக, ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காமலாபுரம் வழியே வந்த காரை நிறுத்திய போலீசார், சோதனை செய்தனர் அப்போது, காருக்குள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ புகையிலை போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் பல்கோத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்பர்மார் என்பவரை கைது செய்தனர். புகையிலை பொருட்களை கடத்தும் கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.