salem PT Web
குற்றம்

சேலம்: 3 பேரை சரமாரியாக வெட்டிய பாஜக பிரமுகர்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தொழில் போட்டி காரணமாக மூன்று பேரை பாஜக பிரமுகர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

சேலம் வீரகனூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும், சதீஷ் என்பவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனை சமாதானம் செய்ய சென்ற பாஜக பிரமுகர் சாமுவேல் என்பவர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக பிரமுகர் சாமுவேல், ரவிக்குமார் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பேரைச் சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாஜக பிரமுகர் சாமுவேலும் காயமடைந்ததால் அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தலைவாசல் வட்டாட்சியர் ஜெயக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார்.