கொலை குற்றவாளி - 7 ஆண்டுகளுக்குப் பிறகு கைது pt desk
குற்றம்

சேலம்: ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி - 7 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

தீவட்டிப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

கடந்த 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி உத்தனபள்ளியைச் சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டுனர் மாதவராஜ். இவரிடம் மதுரைக்குச் செல்ல காரை வாடகைக்குப் பேசி அழைத்துச் சென்ற நபர்கள், ஓமலூர் அருகே மாதவராஜை கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்றனர்.

கைது

இந்த வழக்கில் பட்டறை சுரேஷ், விமல்ராஜ், இளங்கோவன், செல்லா என்கிற சந்திரசேகர் ஆகியோரை அப்போதே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து ஜாமீனில் வேளியே வந்த செல்லா என்ற சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 ஆண்டாக தலைமறைவாக இருந்தார்.

அவரை ஓமலூர் டிஎஸ்பி தனிப்படை போலீசார் நேற்ரிறவு கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பாராட்டினார்.