ஒருவர் கைது pt desk
குற்றம்

சேலம் | விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி – 3 பேர் மீது வழக்குப் பதிவு.. ஒருவர் கைது

ஆத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இளைஞரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 14 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

கைது

இதையடுத்து இரு தரப்பையும் அழைத்துப் பேசியதாகவும், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காதலித்த இளைஞரின் தங்கை அந்த மாணவியிடம், தனது அண்ணனை திருமணம் செய்து கொள்ளும்படியும் அவ்வாறு செய்தால் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் எனவும் கூறயுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார், இளைஞர், அவரது தந்தை காத்தவராயன், தங்கை உட்பட மூன்று பேரும் மீது வழக்குப் பதிவு செய்துள்ள்னர்.

இதைத் தொடர்ந்து இளைஞரின் தந்தை காத்தவராயன் என்பவரை போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள இளைஞர் மற்றும் அவரது தங்கையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.