குற்றம்

பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது

பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது

webteam

சைதாப்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இரண்டு பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டார். 

சென்னை சைதாப்பேட்டை, அண்ணா சாலையின் சிஐடி நகரில் கடந்த 30ஆம் தேதி சசிகலா என்ற பெண் நடந்து சென்றபோது இரண்டு பேர் அவரது தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். அதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவியது. இதையடுத்து புகாரின் பேரில் நடந்த தேடுதலில், 22 வயது லட்சுமணன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் மற்றொருவரை தேடும் பணி நீடிப்பதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.