குற்றம்

சைதாப்பேட்டை: நீதிமன்ற வளாகத்தில் பட்டபகலில் ஆஜராக வந்த ரவுடியை கொல்ல முயன்ற கும்பல்!

சைதாப்பேட்டை: நீதிமன்ற வளாகத்தில் பட்டபகலில் ஆஜராக வந்த ரவுடியை கொல்ல முயன்ற கும்பல்!

webteam

பட்டப் பகலில் போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்திற்கு வந்த பிரபல ரவுடியை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மூன்று பேர் கைது இரண்டு பேர் தப்பி ஓட்டம்

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாலா மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பிரபல ரவுடியான மைலாப்பூர் சிவக்குமாரை அசோக் நகர் பகுதியில் வைத்து கூலிப்படை மூலமாக கொலை செய்த வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

முதலில் வந்த ரவுடி பாலாவை கொலை செய்யும் நோக்கத்தோடு ஐந்து பேர் கொண்ட கும்பல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற் வந்தது. போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பாலாவை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். உடனடியாக அங்கு குவிந்திருந்த காவல்துறையினர் கும்பலை மடக்கி பிடித்தனர். அப்போது இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். மூன்று பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட மூன்று பேரும், கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. பட்ட பகலில் நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை கொலை செய்ய வந்த கும்பலால் நீதிமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தப்பிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.