குற்றம்

ரூ.200 கோடி மோசடி விவகாரம்: நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன்

EllusamyKarthik

பாலிவுட் சினிமா நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு நேரில் ஆஜராகுமாறு மீண்டும் ஒரு முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கப் பிரிவு. வரும் 8-ஆம் தேதி அவர் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து கம்பெனி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக நேற்று மஸ்கட் தப்பி செல்ல முயன்ற ஜாக்குலின், மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது அமலாக்கப் பிரிவில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள காரணத்தால் பயணம் மேற்கொள்ள அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

அமலாக்கப் பிரிவு அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வண்ணம் லுக் அவுட் சர்குலர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் ஜாக்குலினுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பது மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணையில் தான் தெரியவரும். சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.