குற்றம்

ஓசூரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25 லட்சம் பறிமுதல்

ஓசூரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25 லட்சம் பறிமுதல்

நிவேதா ஜெகராஜா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஓசூரில் தர்கா பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது மிதிலேஷ், ரோஹித் என்ற இருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் 25 லட்சம் ரூபாய் வைத்திருப்பது தெரியவந்தது.