முகநூல் மூலமாக நூதன முறையில் 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பாரூக் என்பவருக்கு, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூலில் அறிமுகமாகியுள்ளார். தனது ஜவுளிக்கடைக்கு துணிகள் தேவைப்படுவதாக கூறிய அவர், வெளிநாட்டு பணத்தை பார்சலில் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
வெளிநாட்டு பணத்தை பெற 14 லட்சம் ரூபாய் சுங்கவரி செலுத்த வேண்டுமென அப்பெண் கூறியதை நம்பிய ஃபாரூர், பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்த புகாரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.