ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது கூட்டாளிகள் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபாலன். அவர் மீது நில அபகரிப்பு, கொலை, ஆள்கடத்தல் ஆகிய புகார்களின் கீழ் 45 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அவர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கம்போடியாவில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது வழக்கறிஞர் புருஷோத்தமனுக்கு தகவல் வந்ததை அடுத்து, அவர் கம்போடியா சென்றுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து காஞ்சிபுரத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க, அவரது கூட்டாளிகள் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.