குற்றம்

தம்பதியை ஆயுதங்களால் தாக்கி நகைகள் கொள்ளை

தம்பதியை ஆயுதங்களால் தாக்கி நகைகள் கொள்ளை

webteam

கமுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை வழிமறித்து அரிவாளால் வெட்டி  நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி - மதுரை சாலையில் , இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை வழிமறித்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள், 11 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.பொசுக்குடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு இருசக்கர வாகத்தில் சென்றுள்ளார். அப்போது விரதக்குளம் என்ற இடத்தில் வழிமறித்த 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் அரிவாள்,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி மனைவி ஜெயக்கொடி கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, உள்ளிட்ட 11 சவரன் நகைகைளை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவாறு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பலத்தக் காயமடைந்த தம்பதியினர் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அபிராமம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.