திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஏ.டி.எம்-இல் இருந்த பணத்தைக் கொள்ளை அடிக்க முயன்ற கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளியை பலமாக தாக்கி உள்ளனர்.
திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்மிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 கொள்ளையர்கள் ஏடிஎம்-இல் உள்ள பணத்தை கொள்ளையடிக்க வந்துள்ளனர். இதைக் கண்ட காவலாளி சாமிநாதன் கூச்சலிட்டிருக்கிறார். மேலும் பணத்தை எடுக்க முயன்றவர்களையும் தடுத்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள், அவரை இரும்புக் கம்பியால் பலமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் சாமிநாதனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் நடந்த ஏடிஎம்-இல் உள்ள சிசிடிவி காமிராவில் கொள்ளையர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதையும் போலீசார் தேடி வருகின்றனர்