குற்றம்

ராணிப்பேட்டை: 5 வடமாநில குட்கா வியாபாரிகள் கைது; ரூ.7 லட்சமும், 1 டன் குட்காவும் பறிமுதல்

நிவேதா ஜெகராஜா
சோளிங்கர் நகரில் பிரபல வட மாநில குட்கா வியாபாரிகள் 5 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1 டன் குட்காவை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையின் பாணாவரம் கூட்டுரோடூ சந்திப்பில் அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனத்தை  வாகன தணிக்கையில் இருந்த காவலர்கள் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சுரேஸ்குமார்(வயது 25) மற்றும் நிமோரா(வயது 28) என்பதும், அவர்கள் வைத்திருந்த மூட்டையில் குட்கா பான்மசாலா ஆகிய போதை பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பது குறித்து காவல்துறை தொடர் விசாரணை மேற்கொண்டதில் பாணாவரம் கூட்ரோடு பகுதியில் உள்ள குடோணில் வைத்து குட்கா மற்றும் பான்லாக்கள் விற்பனை செய்து வந்தது அம்பலமாகியது.
இதனை தொடர்ந்து காவல்துறை அங்கு சென்று பார்த்தபோது ஒரு டன் அளவிலான 7 பார்சல்கள் அடங்கிய பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தனர். மேலும் பான் மசாலா ஆன்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை விற்பனை செய்து வைத்திருந்த 7 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் குடோனில் பணியாற்றி வந்த காலுராம் (வயது 32), லட்சுமணன் (வயது 24), சந்திப்(வயது 29) ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர் போலீசார். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தொடர் விசாரணையை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைக்கு இந்த 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.