குற்றம்

ராமேஸ்வரம் டூ இலங்கை: 1கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்:கடத்தல்காரர்கள் சிக்கியது எப்படி?

kaleelrahman

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பவுடர் பறிமுதல் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இருந்து பேருந்து மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 அளவுள்ள கொக்கையின் போதை பவுடரை ராமேஸ்வரத்துக்கு கொண்டு வருவதாக தீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து விரைந்து சென்ற மாவட்ட தீவிர குற்றப்பிரிவு போலீசார் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நிற்பதை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் 1.5 கிலோ கொக்கையின் போதை பவுடர் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போதை பவுடரை பறிமுதல் செய்து 5 பேரை பிடித்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து பிடிபட்ட மனோஜ், சாதிக் அலி, முகமது இஸ்மாயில், சூரியகுமார், அங்குத ராமன் உள்ளிட்ட 5 நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொக்கையின் போதை பவுடரை சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த போதை பவுடரின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.