குற்றம்

முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு

Sinekadhara

முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை நேற்று (17.12.21) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் தனக்கு ஒரு இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்தவாரத்திலிருந்து விடுமுறை காலம் துவங்க உள்ளதால் வரும் திங்கட்கிழமையே தனது வழக்கை விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.