குற்றம்

ராஜபாளையம்: பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் போக்சோவில் கைது

ராஜபாளையம்: பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இருவர் போக்சோவில் கைது

kaleelrahman

ராஜபாளையம் அருகே அரசுப்பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று குடிபோதையில் இருந்த இருவர், மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியதாக தெரிகிறது.

0

இதனால் பயந்த மாணவி அழுது கொண்டே வீட்டுக்குச் சென்றுள்ளார். பெற்றோர் கேட்டபோது உடல் நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 2 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மாணவியை, அவரது தாய் இன்று அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மாணவியின் தாய் அருகே உள்ள கீழராஜ குலராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தகவல் மூலம் 3 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேச பிரபு மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.