ஏம்பல் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக கைதானவர், போலீஸ் பிடியில் இருந்து தப்பியுள்ளார். அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி கொலை வழக்கு தொடர்பாக ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸ், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில் அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியுள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “குற்றவாளியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளியை விரைந்து தேடி வருகின்றனர். விரைவில் தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடித்து விடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.