புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 5 மாத கர்ப்பிணியாக்கிய 20 வயது வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, புதுக்கோட்டை சேங்கைத்தோப்பை சேர்ந்த தீனதயாளன் என்ற 20 வயது வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாகவே இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீனதயாளன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருமயம் கிளை சிறையில் அடைத்தனர்.