புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி தப்பிச் சென்ற கொலையாளிகளை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவிந்த சாலையில் போத்தீஸுக்கு அருகே இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அங்கிருந்த கார் மூலம் தப்பித்துச் சென்றனர். அவர்கள் தப்பியோடும் போது சோதனைச் சாவடிகளில் நிற்காமல் 20க்கும் அதிகமான இடங்களில் விபத்து ஏற்படுத்தினர். கடலூர் நகருக்குள் நுழைந்த அந்த கார், பல வாகனங்கள் மீது மோதியது.
அதனையடுத்து காரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், கொலையாளிகளை தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு காரிலிருந்த தேவர்கொடி, சேகர், சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூவர் தப்பியோடினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் கொளஞ்சி என்பவதும், அவர் சிவகங்கை மாவட்டம் சித்தனூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.