குற்றம்

புதுச்சேரி: பாமக பிரமுகர் கொலை வழக்கு: விருப்ப ஓய்வு எஸ்ஐ., உட்பட 4 பேர் கைது

புதுச்சேரி: பாமக பிரமுகர் கொலை வழக்கு: விருப்ப ஓய்வு எஸ்ஐ., உட்பட 4 பேர் கைது

kaleelrahman

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பாமக மாவட்டச் செயலாளர் தேவமணி கொலை வழக்கில் விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்த தேவமணி என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. காவல்துறை விசாரணையில் நிலத்தகராறு காரணமாக மணிமாறன் என்பவர் தேவமணியை கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், கொலை செய்த கூலிப்படையில் கவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராமசந்திரன் என்பவரும் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணிமாறன், ராமசந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, காரைக்கால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.