இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி செய்ய முயன்ற மருத்துவர்களை தாக்கியதாக விபத்துக்குள்ளன இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விசாகன் (25). இவர், உப்பளம் தண்ணீர் தொட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மீது மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற அரசு மருத்துவர்களான அஜ்மல் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் விபத்துக்குள்ளான இளைஞருக்கு முதலுதவி செய்ய சென்றுள்ளார்.
ஆனால், போதையில் இருந்த விசாகன், உதவி செய்ய வந்த மருத்துவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், மருத்துவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்து விசாகனை கைது செய்த ஒதியஞ்சாலை போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.