சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரத்தில் சிக்கிய வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் வரும் மே 31 அன்று ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது மாவட்ட குழந்தைகள் நலக்குழு.
ஆசிரியர் கைதான வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரா மற்றும் கே.கே.நகர் கிளைப் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜனும் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை வீடியோ பதிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஆசிரியர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அந்த கோணத்திலும் போலீசார் இப்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.