புதுச்சேரியில் சிகிச்சை பெற மருத்துவமனை வந்தபோது தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வடலூரை சேர்ந்த சம்பத்குமார் கடந்த 7ஆம் தேதி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பேட் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது சம்பத்குமார் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சம்பத்குமார், கழிவறைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்கு போலீசார் அனுமதியளித்த நிலையில், கழிப்பறைக்கு சென்ற சம்பத்குமார் அங்கிருந்து தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தப்பியோடிய கைதி சம்பத்குமாரை பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.