விழுப்புரம் மாவட்டத்தில் ஆடு விபாபாரியிடம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் கேட்ட காட்சி வெளியாகியுள்ளது.
விழுப்புரம் - திருவண்ணாமலை இடையேயுள்ள கெடார் பகுதியில், போக்குவரத்து ரோந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், ஆடுகளை ஏற்றி வந்த நபரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டு வியாபாரிக்கும் - லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளருக்கும் இடையே நடந்த உரையாடலும் வீடியோவில் பதிவாகியுள்ளது.