குற்றம்

ரகசிய தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார்: கஞ்சா விற்ற 7 பேர் கைது

webteam

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கொல்லம்பாளையம் குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றித்திருந்த பெண்ணை விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பதும், 69 ஆயிரம் மதிப்புள்ள 3.4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செல்வியை பிடித்து தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர் .இதேபோல் பெருந்துறையில் பைக்கில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த சுரேஷ், அப்துல் ரகுமான் மற்றும் பவானியில் பழனியம்மாள், ராமநாதன், பூங்கொடி ஆகியோரை கைது செய்து 1.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மருத்துவரின் அறிவுரைத்தல் இல்லாமல் போதைக்காக பயன்படுத்த வைத்திருந்த 43 மயக்க மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்த சித்தோடு போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.