குற்றம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை: 17 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை: 17 பேர் கைது

JustinDurai

சென்னையில் காவல் துறையினர் கடந்த 7 நாட்களில் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விறபனை செய்தது தெடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகையிலையை முற்றாக ஒழிக்கும் நோக்கில் கடந்த 7 நாட்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 17 பேரிடமிருந்து 25.4 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், ஒரு இரு சக்கர ஆகனம், செல்போன் மற்றும் 14 ஆயிரத்து 310 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.