புதுக்கோட்டை காந்தி நகரில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குணா என்பவருக்கும், நவீன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாலை 3.30 மணிக்கு குணா, அவரது சகோதரர் பிரசாத் ஆகிய நவீன்குமாரின் உறவினர் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் பாலச்சந்திரன் என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரி, குணாவையும், பிரசாத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.