குற்றம்

7 இடங்களில் கியூஆர் கோடு மூலம் மோசடி - ஊர்க்காவல் படை காவலர் கைது

7 இடங்களில் கியூஆர் கோடு மூலம் மோசடி - ஊர்க்காவல் படை காவலர் கைது

webteam

சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் கியூஆர் கோடு மூலம் மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை காவலரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (32), இவர் அதே பகுதியில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்க பேடிஎம் கியூஆர் கோடை கடையில் ஓட்டியுள்ளார். சில தினங்களாக வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தினாலும் தனது வங்கிக் கணக்கில் சேரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆனந்த கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு பணம் சென்ற வங்கிக் கணக்கை கண்டறிந்து பார்த்தபோது கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது.

ஸ்ரீதரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது காவல்துறையில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருவதாகவும், எளிதில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் காவல்துறையில் பணியில் இருப்பதுபோல் போலி அடையாள அட்டை தயாரித்து வைத்துள்ளதும் தெரியவந்தது.

இதனை வைத்து பாரத் பே எனும் கியூ ஆர் கோர்டை வாங்கி கடையின் உரிமையாளருக்கு தெரியாமல் கியூ ஆர் கோடு மீது இதனை ஒட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் 7 கடைகளிலும் கியூஆர் கோடை ஒட்டியுள்ளார். அவரிடம் இருந்து கியூ ஆர் கோடு ஸ்டிக்கரை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: காதலிக்க மறுத்த சிறுமி - குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது