குற்றம்

இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

webteam

இளம் பெண்ணை 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரை அடுத்த சீக்கினாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா. கூவத்தூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த திங்கள் கிழமை வேலை முடித்து விட்டு இரவு வீட்டிற்குத் திரும்ப, பேருந்து நிலையம் வந்தார். அப்போது பவுஞ்சூர் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் நண்பர் ஹேநாத் வீட்டில் வீடுவதாக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது கூவத்தூர் பகுதியை சேர்ந்த பீமராவ், தினேஷ்குமார், தட்சிணாமூர்த்தி, விஜி, தயாநிதி. கதிரவன் ஆகியோர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். 

அந்தப் பெண்ணும் அவரது நண்பரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் ஹேமநாத்தை தாக்கிவிட்டு, அந்தப் பெண்ணை தோப்புக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அந்த பெண் வீட்டிற்கு செல்லாமல் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் கூவத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவம் நடந்த இடம் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடம் என்பதால் வழக்கை அங்கு மாற்றினர். பின்னர், போலீசார் பீமராவ், தினேஷ்குமார். தட்சிணாமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.