குற்றம்

தேனி: வனத்துறையினரை தாக்கியவர்கள் நக்சல்களா? நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை

JustinDurai
(கோப்பு புகைப்படம்)
கம்பம் வனப்பகுதியில் கடந்த 30ஆம் தேதி இரவு ரோந்து சென்றவர்கள் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்தியவர்கள் நக்சலைட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள செல்லார்கோவில் மெட்டு பகுதியில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு வனத்துறையினர் ரோந்து சென்றபோது வனப்பகுதியில் பதுங்கியிருந்த 7 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இவர்கள் நக்சலைட்டுகளாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கேரள மாநில எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.