விசிக நிர்வாகி கைது pt desk
குற்றம்

பெரியகுளம் | பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விசிக நிர்வாகி கைது

பெரியகுளம் அருகே பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வி.சி.க. நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: J.அருளானந்தம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண் நேற்று மாலை தனது வீட்டின் முன் பகுதியில் அமர்ந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தென்கரை பேரூராட்சி வி.சி.க துணைச் செயலாளர் சங்கையா என்பவர், அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Arrested

இதையடுத்து உடனடியாக அந்தப் பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த கணவர் ஓடி வந்து அந்தப் பெண்ணை காப்பாற்றியுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வி.சி.க நிர்வாகி சங்கையாவை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தென்கரை காவல்துறையினர் வி.சி.க நிர்வாகி சங்கையா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்கு வெளியே அமர்ந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த பெண்ணை வி.சி.க. நிர்வாகி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.