குற்றம்

தெலங்கானா: ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள்...விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

தெலங்கானா: ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள்...விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

Veeramani

தெலங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு, சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின், மஹபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த சனிகபுரம் கிராமத்திற்கு அருகே ஒரு மலையடிவாரத்தில் இறந்த 30-க்கும் மேற்பட்ட குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. "இந்த செயலை யார் செய்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் இந்த செயலை செய்தார்களா அல்லது வேறு யாராவது இதனை செய்தார்களா என்று நாங்கள் விசாரிக்கிறோம்" என்றும் வனத்துறை அதிகாரி கூறினார்.

சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டுள்ள குட்டிகள் உட்பட இறந்த 30-க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனை நடத்த முடியவில்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.