கைது செய்யப்பட்ட கருப்பசாமி புதியதலைமுறை
குற்றம்

கோவில்பட்டி சிறுவன் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம் 3 பேரிடம் விசாரணை - ஒருவர் கைது

கோவில்பட்டி சிறுவன் மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சண்முகப் பிரியா . செ

செய்தியாளர் : மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன் பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி கடந்த திங்கட்கிழமை காணாமல் போய் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டார். அதிக அழுத்தம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என்று உடற்கூராய்வு முதற்கட்ட ஆய்வில் தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவன் மர்ம மரணத்திற்கு என்ன காரணம் ,? யார் செய்தார்கள் என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து நான்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனையும் மேற்கொண்டனர்.

சிறுவன் காணாமல் போன போது கழுத்தில் ஒன்றை பவுன் தங்கச் செயின் மற்றும் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிந்திருந்துள்ளார். ஆனால் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டபோது நகைகள் இல்லை எனக் கூறப்பட்ட நிலையில் நகைக்காக இந்தக்கொலை நடந்திருக்குமா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல்துறை விசாரணை

தொடர்ச்சியாக கடந்த நான்கு நாட்களாக சிறுவனின் வீட்டு பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ந்து கவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரியவர்களைத் தனி இடத்தில் ரகசியமாக வைத்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறுவன் மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக 3 சந்தேகத்திற்குறிய நபர்களிடம் விசாரனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சிறுவன் கருப்பசாமி வீட்டின் எதிரே வசித்து வந்த ஆட்டோ டிரைவர் சங்கர் ராஜ் மகன் கருப்பசாமியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொலைக்கன காரணம் என்ன அவர்தான் குற்றவாளியா என்பது விசாரணையில் தெரியவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.