குற்றம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க நீதிபதியின் கையெழுத்திட்ட போலீஸ்!

Veeramani

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபரை ஜாமீனில் விடுவிப்பதற்காக, மாஜிஸ்திரேட்டின் கையொப்பத்தை மோசடியாக இட்டதாக ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட நபரை சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிப்பதற்காக, மாஜிஸ்திரேட் கையொப்பத்தை மோசடியாக இட்ட  ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காவல்துறையின் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (.எஸ்.) சூர்யா நாராயண் பெஹெரா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் புகுடாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்று  இன்ஸ்பெக்டர் பொறுப்பாளர் சித்தா ரஞ்சன் பெஹெரா கூறினார்.

தனது மருமகனை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கர்ச்சுல்லியைச் சேர்ந்த பாபுலா பெஹெரா கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் தனது மகளின் திருமணத்திற்காக பஞ்சநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் உத்தரவு பிப்ரவரி 12 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு புகுடா ஜேஎம்எஃப்சி நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. புகுடாவின் நீதித்துறை மாஜிஸ்திரேட் அன்று விடுப்பில் இருந்தார், அதனால் குற்றம் சாட்டப்பட்ட .எஸ். ஜாமீன் உத்தரவில் நீதிபதியின் கையொப்பத்தை மோசடியாக இட்டதாகவும், அதன்பின் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.