குற்றம்

ஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து ! செவிலியர் தற்கொலை

ஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து ! செவிலியர் தற்கொலை

jagadeesh

சென்னை திருவொற்றியூர் அருகே செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் நந்தினி. வயது 24. இவர் திருவொற்றியூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரும், இவரது சகோதரியும் வீட்டில் தங்கியிருந்தனர். இவரது தாய், தந்தையர் மணலி புதுநகரில் உள்ள அத்திப்பட்டு என்ற ஊரில் வசித்து வருகின்றனர். நந்தினியின் சகோதரி பாரிமுனையில் உள்ள ஒரு மருந்தகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று நண்பகல் 2 மணி அளவில் நந்தினியின் சகோதரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது நந்தினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இரவு 9 மணியளவில் நந்தினியின் சகோதரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தங்கை படுக்கையறையில் வாயில் நுரை தள்ளியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். நந்தினியின் பக்கத்தில் ஒரு ஊசியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தை ஏற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நந்தினியை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என அவர் கடிதம் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலையால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து  சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.