குற்றம்

குஜராத்தில் 2,988 கிலோ போதைப் பொருள்கள் பிடிபட்ட வழக்கு-கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

குஜராத்தில் 2,988 கிலோ போதைப் பொருள்கள் பிடிபட்ட வழக்கு-கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

Sinekadhara

21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பிடிபட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்தவரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியே குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கு 2,988 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கப்பல் மூலம் கடத்தப்பட்டன. இவற்றை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்ததில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள 'ஆஷி டிரேடிங்' என்ற கம்பெனிக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. அந்த நிறுவனத்தை நடத்திய மச்சாவரம் சுதாகரும், அவரது மனைவியும் சென்னை - போரூர் அருகே கொளப்பாக்கத்தில் கைது செய்யப் பட்டனர். தலிபான் பயங்கரவாதிகள் நான்கு பேர், உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் என எட்டுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி மற்றும் கேரளாவிலிருந்து கோவை சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், வழக்கில் தொடர்புடைய ராஜ்குமார் என்பவரின் சகோதரரின் வீட்டில் சோதனை நடத்தினர். வடவள்ளி - ராமசாமி நகரில் உள்ள வீட்டில் நடந்த சோதனையில், மடிக்கணினி, அலைபேசி, வங்கிக் கணக்கு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.