குற்றம்

வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை

webteam

கும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் இளம்பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லியில் வசித்து வந்த இவருக்கு சமீபத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து பணியில் சேர்வதற்காக தமிழகம் வந்தார் சுதா. சென்னையிலிருந்து ரயில் மூலம் கும்பகோணம் சென்ற அவர் ஆட்டோவை வாடகைக்கு பிடித்து தங்குவதற்கான இடத்திற்கு செல்ல முயன்றுள்ளார். அந்த ஆட்டோக்காரர் சுற்றுப்பாதையில் செல்வதை உணர்ந்த சுதா உடனடியாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒரு இருட்டான இடம் அருகே சுதாவை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். 

இதன்பின் அந்த நேரத்தில் அங்கு பைக்கில் வந்த 4 இளைஞர்கள் சுதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.