நிதி நிறுவனம் நடத்தி 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் தேடப்பட்டு வந்த நிர்மலன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நிதி நிறுவனம் நடத்தி 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் தேடப்பட்டு வந்த நிர்மலன் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீராசுமதி முன் சரணடைந்தார். கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் 3 நிதி நிறுவனங்கள் நடத்தி 13500 வாடிக்கையாளர்களிடம் சுமார் 2000 கோடி ரூபாய் அவர் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிர்மலனை தமிழக, கேரளா காவல்துறையினர் தேடி வந்தனர். 70 நாட்களுக்கு பின்னர் அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, யார் யாருக்கு எவ்வளவு தரப்பட வேண்டும் என்ற விவரங்களைக் கொண்ட கடிதத்தை நீதிபதியிடம் நிர்மலன் அளித்துள்ளதாக தெரிகிறது. அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.