செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள உப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் டேனி பால். இவர், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு இவர் கல்லூரி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் உப்பட்டி பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த இரண்டு பள்ளி மாணவிகளை டேனி பால் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஒரு மாணவியை அவரது வீட்டில் இறக்கி விட்ட அவர், மற்றொரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து தப்பித்த மாணவியை, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் பத்திரமாக மீட்டு வீட்டில் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேவாலா காவல்துறையினர் டேனி பாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.