தோட்டக்கலைத் துறை அதிகாரி உட்பட 3 பேர் கைது  pt desk
குற்றம்

நீலகிரி | தண்ணீர் குழாய்களை திருடி விற்றதாக தோட்டக்கலைத் துறை அதிகாரி உட்பட 3 பேர் கைது

கூடலூரில் விவசாயிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களை திருடி விற்ற தோட்டக்கலைத் துறை அதிகாரி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான தண்ணீர் குழாய்கள் மாயமாகி இருந்தது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Arrested

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கூடலூர் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வரும் தயானந்தன் என்பவர் உப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சதானந்தன் ஆகியோருடன் இணைந்து திருடி வெளியில் விற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரி தயானந்தன் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அநதப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.