குற்றவாளி குமரேஷ்
குற்றவாளி குமரேஷ் PT
குற்றம்

”நானும் ரவுடி தான்” கையில் அரிவாளுடன் போஸ்.. போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டவருக்கு நேர்ந்த கதி!

Jayashree A

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நாச்சான்குளம் மேலூரை சேர்ந்தவர் வேலாயுதம் என்பவருடைய மகன் குமரேசன் (வயது 22). இவர் அந்த பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய அரிவாளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அந்தப் பகுதியில் பரவலாக சமூகவலை தளங்களில் பரவியது.

 தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோக்கள் காவல்துறையினருக்கும் தெரியவந்தது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை நேற்று கைது செய்தார்.