நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
தளவாய்ராஜ் பாண்டியன் என்பவரிடம் இசக்கிமுத்து என்ற கூலித்தொழிலாளி கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். வாங்கிய தொகையைவிட கூடுதல் பணம் கொடுத்தும், தொடர்ந்து மிரட்டியதால் இசக்கிமுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்தார். அதில் இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இசச்கிமுத்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து கந்துவட்டிக்காரர் தளவாய்ராஜ் பாண்டியன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மனைவி முத்துலட்சுமியும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாகவுள்ள தளவாய் பாண்டியனின் தந்தை காளியப்பனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.