இளைஞர் போக்சோவில் கைது pt desk
குற்றம்

நெல்லை | செல்போன் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

நெல்லை அருகே சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர் செய்த பட்டதாரி இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்

நெல்லை மாவட்டம் வள்ளியூர், கண்ணன்நல்லூர், கீழத் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (23). பிஎஸ்சி பட்டதாரியான இவர், 14 வயது சிறுமி ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

Arrested

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.