குற்றம்

ஓட்டைப்பிரித்து கொள்ளை: தடுத்தவருக்கு அரிவாள்மனை வெட்டு!

ஓட்டைப்பிரித்து கொள்ளை: தடுத்தவருக்கு அரிவாள்மனை வெட்டு!

webteam

நெல்லையில் வீட்டின் ஓட்டைப்பிரித்து கொள்ளை அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலான்குடியிருப்பு பகுதியில் திருமலை என்ற 50 வயது பெண் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் ஓட்டைப் பிரித்து இறங்கிய கொள்ளையன் பீரோவை உடைத்து திருட முயற்சித்துள்ளார். சத்தம் கேட்டு கண் விழித்த திருமலை, திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். அத்துடன் கொள்ளையனை தடுக்க முயற்சித்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணை, அரிவாள்மனையால் தாக்கி விட்டு திருடன் தப்பி ஓடியதாகத் தெரிகிறது. படுகாயம் அடைந்த அப்பெண் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக புளியரை காவல்துறையினர் மற்றும் நெல்லை மாவட்ட கைரேகை தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.