இறந்தவர்கள் கூகுள்
குற்றம்

நாக்பூர் | “படிப்பு வரலைனா காலேஜை நிறுத்திடு” - வற்புறுத்திய பெற்றோரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

என்ஜினீயரிங் படிப்பில், மூன்று முறை தோல்வியுற்ற 21 வயது இளைஞன் படிக்கச் சொல்லிய பெற்றோரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Jayashree A

நாக்பூரில் என்ஜினீயரிங் படிப்பில், மூன்று முறை தோல்வியுற்ற 21 வயது இளைஞன் படிக்கச் சொல்லி வற்புறுத்திய பெற்றோரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூரைச் சேர்ந்தவர் 21 வயதான உத்கர்ஷ். இவர் அப்பகுதி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். இவரது தந்தை லீலாதர் கெரடியில் இருக்கும் அனல்மின் நிலயத்தில் வேலை செய்து வருகிறார். தாயார் அருணா ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி அவர் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உத்கர்ஷின் படிப்பில் மிகவும் பின் தங்கி இருந்துள்ளார். இவரை நன்றாக படிக்குமாறு அவரது பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர் பொறியியல் படிப்பில் தொடர்ந்து தேர்வு பெறாமல் இருந்து வரவே அவரது பெற்றோர்கள், உத்கர்ஷினிடம், “உனக்கு படிப்பு வரவில்லை என்றால் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயம் செய்.. ” என்று தொடர்ந்து சொல்லியுள்ளனர். இது உத்கர்ஷுக்கு அவமானமாய் போய் இருக்கிறது.

சம்பவதினத்தன்று, அதாவது டிசம்பர் 26ம் தேதி அன்று, தாயார் அருணா , உத்கர்ஷிடம், “உனக்கு படிப்பு வரவில்லை என்றால் கல்லூரி செல்வதை நிறுத்து” என்று கூறியுள்ளார். இது இருவருக்கிடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உத்கர்ஷ் தனது தாயாரை கழுத்தை நெரித்துக்கொன்று உடலை படுக்கை அறையில் கிடத்திவிட்டு வெளியில் சென்ற தனது தந்தைக்காக காத்து இருந்துள்ளார்.

வெளியில் சென்றுவிட்டு இரண்டுமணி நேரம் கழித்து வந்த லீலாதரை உத்கர்ஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இருப்பினும், கழுத்தில் ஏற்பட்ட காயத்துடன், லீலாதர் உத்கர்ஷிடம், மிக அமைதியாக, “உனக்கு படிக்க பிடிக்கவில்லை என்றால் படிக்க வேண்டாம். உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்...” என்றவர், அம்மாவை கூப்பிட்டு வரும்படி உத்கர்ஷிடம் கூறியுள்ளார்.

உத்கர்ஷ் அவரிடம், முன்னமே அம்மாவைக் கொன்று விட்டதாக கூறியதுடன், மீண்டும் கத்தியை எடுத்து லீலாதரை பலமுறை குத்தி அவரையும் கொன்றுள்ளார்.

பிறகு லீலாதரின் மொபைலில், அவர் கைப்பட எழுதியதாக தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை அவரது மொபைல் வால்பேப்பராக வைத்துள்ளார். பிறகு கல்லூரிக்கு சென்ற உத்கர்ஷ் தனது சகோதரியிடம், தாய் தந்தை இருவரும் தியானத்திற்கு வெளியூர் சென்றிருப்பதால், உறவினர் வீட்டில் தங்கும்படி பெற்றோர்கள் கூறியதாக சொல்லி, அவரை கூட்டிக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் உத்கர்ஷ்-ன் சகோதரி தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வரவே, தியனம் செய்யும் இடத்தில் மொபைல் அனுமதி இல்லையாததால், பெற்றோர்கள் போன் எடுக்கவில்லை என்று உத்கர்ஷ் கூறியதை அவர் நம்பியுள்ளார்.

ஒருவாரம் கழித்து இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தினர், உத்கர்ஷ் வீட்டை சென்று பார்த்துள்ளனர். அங்கு தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்தது தெரிய வரவே... உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலிசாரின் விசாரணையில், உத்கர்ஷ் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், போலிசார் உதகர்ஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.