செய்தியாளர்: சி.பக்கிரிதாஸ்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை சோதனை சாவடியில் ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் காவல்துறையினர்; ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த காரின் டிக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து கோடியக்கiர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா என்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை காரில் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்;;;ண ரெட்டி என்பவரை வேதாரண்யம் காவல்துறையினர் கைது செய்;து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கஞ்சாவை கடத்தி வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைப்பற்றபட்ட 105 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.21 லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.