குற்றம்

பார்வையற்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டுளுக்கு பின் கிடைத்த தண்டனை

பார்வையற்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டுளுக்கு பின் கிடைத்த தண்டனை

JustinDurai

பார்வையற்ற பெண்ணுக்கு ரயிலில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

கடந்த 2017ஆம் ஆண்டில் மும்பையில் ஓடும் உள்ளூர் ரயிலில் 17 வயதான சிறுமி, கண் பார்வையற்ற தனது அத்தையுடன் பயணம் செய்துள்ளார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 33 வயதான மொஹ்சின் சௌகுலே என்கிற இளைஞர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கண் பார்வையற்ற சிறுமியின் அத்தையிடமும் சௌகுலே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த இரு பெண்களும் கூச்சலிடவே அருகிலிருந்த பயணிகள் சௌகுலேவை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சௌகுலே மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தீர்ப்பின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட மொஹ்சின் சௌகுலே குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.35,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதையும் படிக்க: மனநலம் பாதிக்கப்பட்டவர் வீடியோவை வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் மீது ஐ.ஜி. நடவடிக்கை!