குற்றம்

இரட்டை கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை திருடும் சி.சி.டி.வி காட்சி

இரட்டை கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை திருடும் சி.சி.டி.வி காட்சி

webteam

சேலம் மாவட்டம் சீரகாபாடி பகுதியில் தனியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சீரகாபாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து சீரகாபாடி மேம்பாலத்தின் அருகிலுள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்ட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மேலும், அவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கல்லூரியில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பது வழக்கமாக உள்ளது. 

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களின் திருட்டு அதிகரித்து கொண்டே சென்றது. நள்ளிரவில் வரும் கொள்ளையர்கள் விலை உயர்ந்த புல்லட், யமகா, கே.டி.எம் போன்ற மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து கொள்ளையடித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த மாணவர் சுரேஷ்பாபு, ஈரோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால் உள்பட நான்கு மாணவர்களின் மோட்டர் சைக்கிள்கள் அடுத்தடுத்து திருட்டு போனது. மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து ஆய்வு செய்த மாணவர்கள் சி.சி.டி.வி கேமரா விடியோவில் இரட்டை கொள்ளையர்கள் ஒரு புல்லட்டை திருடும் கட்சிகளை காவல் துறையிடம் ஒப்படைத்தர்.
இந்த சி.சி.டி.வி பதிவில் நள்ளிரவு நேரத்தில் உள்ளே வரும் இரட்டை கொள்ளையர்கள் லாவகமாக மோட்டார் சைக்கிளின் சைடு லாக்கை காலால் அழுத்தி உடைக்கின்றனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் வயர்களை அறுத்துவிட்டு நைசாக வெளியே எடுத்து சென்று பறந்து விடுகின்றனர். இந்த பகுதியில் வெளிமாநில வெளி மாநில மாணவர்கள் அதிகமாக தங்கியுள்ளதால் இந்தப் பகுதியை குறி வைத்து இரட்டை கொள்ளையர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். அவர்களை விரைந்து பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.