கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால், இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜீமீன் ஊத்துக்குளி, செல்லமுத்து நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி வித்யா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள்.. நேற்று மாலை நீண்ட நேரமாகியும் வித்யாவின் வீடு பூட்டிக் கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த வித்யாவை மீட்ட அவர்கள், மயக்கமடைந்த நிலையில் இருந்த குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், வழியிலேயே வித்யாவும், குழந்தைகளும் உயிரிழந்தனர். இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ள வித்யா, கணவர் ராஜேஷ் தனிக்குடித்தனம் வரம் சம்மதிக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.