ஹைதராபாத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை 3 பேர் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
கொல்லூரில் தெல்லாபூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.சி புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கணவனை பிரிந்த 30 வயதான ஒரு பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் பத்து வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்திருக்கிறார்.
வியாழக்கிழமை அந்தப் பெண் இறந்துகிடப்பதை கவனித்த கிராமத்தினர், போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். சோதனை முடிவில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
போலீஸ் விசாரணையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர், அவர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கையில் அவரைக் கடத்தி, கிராமத்திற்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்குக் கொண்டுசென்று, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாகியுள்ள அந்த மூன்று பேரையும் போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.